உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது

பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சிவகிரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி 35. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாஞ்சாலி கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து தனியே வசித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரவேல் 39, என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. சமீப காலமாக பாஞ்சாலி, சமுத்திரவேலுடன் பேசுவதை தவிர்த்தார். நேற்று முன்தினம் இரவில் சமுத்திரவேல், பாஞ்சாலியை ரோட்டிற்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் கத்தியால் குத்தினார். இதில் பாஞ்சாலி சம்பவ இடத்தில் இறந்தார். சமுத்திரவேலுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை