உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை

தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி நகராமானது சுற்றியுள்ள, 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக உள்ளது. வட்டாட்சியர், கோட்டாட்சியர், நீதிமன்றங்கள், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்கள் உள்ள பகுதியாகும்.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, சுகாதாரம், தொழில், அரசுப்பணி என பல்வேறு தேவைகளுக்கு பொன்னேரி நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில், பொன்னேரி வந்து செல்லும் பொதுமக்கள் வெயிலில் மிகவும் சோர்வடைகின்றனர்.கோடை காலம் துவங்கினால், பல்வேறு கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படும். கடந்த ஆண்டு பொன்னேரி நகராட்சி நிர்வாகம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தேரடி, சின்னகாவணம் என பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகளை வைத்து தண்ணீர் பந்தல்களை சிறப்பாக செயல்படுத்தியது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போதும் அதுபோன்று குடிநீர் பந்தல்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை