உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விமானத்தின் சக்கரத்தில் கோளாறு ரன்வேயில் 1 மணி நேரம் டென்ஷன்

விமானத்தின் சக்கரத்தில் கோளாறு ரன்வேயில் 1 மணி நேரம் டென்ஷன்

சென்னை: துபாய் - சென்னை இரு மார்க்கத்திலும், தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் காலை 9:50 மணிக்கு, சென்னையில் இருந்து 240 பயணியருடன் துபாய்க்கு புறப்பட விமானம் தயாரானது.ஓடுபாதையில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் 'நோஸ் வீல்' எனும் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தெற்கு திசையில் செல்ல வேண்டிய நிலையில், திடீரென வடக்கு திசையில் நின்றது.நீண்ட நேரமாக அச்சக்கரம் செயல்படாததால், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.உடனடியாக, விமான தரைத்தள பராமரிப்பு பணியாளர்கள் விரைந்து வந்து, இழுவை வண்டியில் விமானத்தை நகர்த்தி சென்றனர்.பின், விமானத்தின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக 11:10 மணிக்கு புறப்பட்டு சென்றது.இதனால், நேற்று முன்தினம் காலை 10:00 மணியில் இருந்து 11:10 மணி வரை, பிரதான ஓடுதளத்தில் இயங்கும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இரண்டாவது ஓடுபாதையில் இயக்கப்பட்டன.இந்த நிகழ்வு தொடர்பாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.முதன்மை பிரதான ரன்வே தற்காலிகமாக செயல்படாமல் போனது, விமானியின் கவனக்குறையா அல்லது தொழில்நுட்ப பிரச்னையா என்பது குறித்து விசாரனை நடக்கிறது.

விமான நிலையத்தில் நாய்கள்

கட்டுப்படுத்த நடவடிக்கைசென்னை விமான நிலைய வருகை முனையம் அருகே, பயணியரை அச்சுறுத்தும் வகையில், நாய்கள் திரிகின்றன. பயணியர், ஊழியர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்த புகாரையடுத்து, விமான நிலையத்தில் உள்ளே தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள், 'ப்ளூ கிராஸ்' ஊழியர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:இங்குள்ள நாய்களின் மொத்த எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அதில் 46 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் '5இன் ஒன்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை அடையாளம் காண்பதற்காக, அவற்றின் கழுத்தில் வண்ண பட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. 34 நாய்களும், பிடித்த இடத்திலேயே விடப்பட்டன. மேலும், 12 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து, தொடர் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி