உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செல்வ விநாயகர் கோவிலில் 11,108 லட்டு அலங்காரம்

செல்வ விநாயகர் கோவிலில் 11,108 லட்டு அலங்காரம்

கடம்பத்துார்கடம்பத்துார் ஒன்றியம்திருப்பந்தியூர் ஊராட்சி யில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில். இங்கு நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று 11,108 லட்டு சிறப்பு அலங்கார தரிசனம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 11,108 லட்டு அலங்காரம்துவங்கியது.நேற்று காலை 9:00 மணிக்கு லட்டு அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு வழித்துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், ஸ்ரீபெரும்புதுார், சோகண்டி, சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ