உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் 13 பேர் பணியிட மாற்றம்

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் 13 பேர் பணியிட மாற்றம்

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்துார், திருத்தணி, பூந்தமல்லி, மீஞ்சூர், எல்லாபுரம், ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, புழல், வில்லிவாக்கம், பூண்டி என, 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் 13 ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர்கள் நிலையில் உள்ள அலுவலர்களை, நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள், உடனடியாக பணியில் சேர்ந்த விபரத்தை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ