| ADDED : மார் 22, 2024 09:06 PM
பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபை தொகுதியில், மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் 20ம் தேதி, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 70,000 ரூபாய் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இந்நிலையில், பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் பொன்னேரி, தச்சூர், ஆரணி பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, ஆரணி பகுதியில், சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அதையடுத்து, விற்பனையில் ஈடுபட்டிருந்த, ராமநாதபுரம், திருவிடந்தை பகுதியை சேர்ந்த சசிகுமார், 49, என்பவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.அவரிடம் இருந்த 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணனிடம் ஒப்படைத்தனர்.