உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.23,000 அபராதம் வசூல்

1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.23,000 அபராதம் வசூல்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி அதிரடி சோதனை நடத்தி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்தனர். 100 கடைகளுக்கு, 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்து வருகின்றனர். பங்க் கடை, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து, அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தும் வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3-ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகராட்சி சார்பில் உழவர் சந்தை பகுதியில் உள்ள பூக்கடை மற்றும் மளிகை கடைகளில் நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசர், சுகாதார அலுவலர் கோவிந்தராஜு, ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், 100 கடைகளுக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பை, மந்தாரை இலைகள் வழங்கினர். தொடர்ந்து பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை