மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத ராஜபத்மாபுரம் சாலை
15-Sep-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜாகீர்மங்கலம் கிராமம். இங்கு ஜாகீர்மங்கலம்-- பழையனூர் வரையிலான இரண்டு கி.மீ., தூர தார்ச்சாலை 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை மூன்று ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமான சாலையாக மாறியுள்ளது.மேலும் தார்ப்பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு கூட திருவாலங்காடுக்கு பழையனூர் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த தார்ச்சாலை சேதமடைந்து உள்ளதால் சென்று வர முடியவில்லை. பள்ளி வாகனம் இச்சாலையில் வந்தால் கவிழும் நிலை உள்ளதால் குழந்தைகள் பழையனூரில் இறக்கி விடப்படுகின்றனர். அவர்கள் புத்தகப்பையை தூக்கிக்கொண்டு நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் முதியவர்கள் இச்சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தார்ச்சாலையை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-Sep-2024