உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ.2.93 கோடி

திருத்தணியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ.2.93 கோடி

திருத்தணி, திருத்தணி - அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, நான்கரை ஏக்கர் பரப்பில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021- -22ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் நேரு கடந்த, 2022ம் ஆண்டு துவக்கி வைத்தார்.புதிய பேருந்து நிலையம் அமைத்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஒப்பந்ததாரருக்கு, 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் பணி துரித வேகத்தில் நடந்து வந்தது. ஆனால், ஒப்பந்ததாரருக்கு தொகை வழங்கப்படாததால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது: புதிய பேருந்து பணிகளுக்கு நிதி பற்றாக்குறையால் தரைதளம் மற்றும் பேருந்து முகப்பு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பரிந்துரை செய்தோம். தற்போது, கூடுதல் நிதியாக, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு, நிர்வாக அனுமதியும் அரசு வழங்கியுள்ளது. தற்போது தொழில்நுட்ப அனுமதிக்காக காத்திருக்கிறோம். அடுத்த மாதம் பணிகள் துவங்கி, டிசம்பர் மாதத்திற்குள் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை