உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

சோழவரம்:சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள, சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக, மாருதி ஸ்விப்ட் கார் ஒன்றும், அதில் நான்கு நபர்களும் இருப்பதை கண்டனர்.அங்கு சென்றபோது, காரில் இருந்த நால்வரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர். காரை சோதனை செய்தபோது, அதில், 1,200 கிராம் கஞ்சா இருந்தது.விசாரணையில், விருதுநகர் மாவட்டம், ஆத்துார் பகுதியை சேர்ந்த முத்துராசா, 42, திருத்தணியை சேர்ந்த சந்துரு, 24, சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த ரவி, புழல் பகுதியை சேர்ந்த சுரேஷ், 34, என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.அதையடுத்து போலீசார் நான்குபேரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ