உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இளம்பெண் தற்கொலை வழக்கு மாமியார் உட்பட 4 பேர் கைது

இளம்பெண் தற்கொலை வழக்கு மாமியார் உட்பட 4 பேர் கைது

மீஞ்சூர்:மீஞ்சூரைச் சேர்ந்த சீனு, 49, என்பவர் மகள் ரேவதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்தழகு என்பவருக்கும், 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தை உள்ளனர்.ரேவதியை, மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 16ம் தேதி ரேவதி, வீட்டில் இருந்த கொக்கு மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப்படுத்தியதால் தான், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், மீஞ்சூர் காவல் நிலையத்தில் சீனு புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், நேற்று ரேவதியின் மாமியார், சாந்தி, 50, மாமனார் மாரி, 30, நாத்தனார்கள் மாலா, 30, கீதா, 35, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை