உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலிஷ் போடுவதாக 9 சவரன் நகை திருட்டு

பாலிஷ் போடுவதாக 9 சவரன் நகை திருட்டு

திருத்தணி:திருத்தணி பைபாஸ் சாலை பிர.எம்.எஸ்., நகரில் வசித்து வருபவர் ராஜா மனைவி முத்தரசி,40. இவரும், இவரது கணவரும், வீட்டில் தையல் இயந்திரங்கள் வைத்து, கூலிக்கு துணி தைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முத்தரசி வீட்டில் தனியாக இருந்த போது அந்த தெருவில் இரு மர்ம நபர்கள் நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாகக் கூறிச் சென்றனர். அப்போது முத்தரசி வீட்டில் இருந்து வெளியே வந்த போது, மர்ம நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்து, நகைகளுக்கு குறைந்த விலையில் பாலிஷ் போட்டு தருவதாக கூறி வீட்டிற்குள் சென்றனர்.பின், முத்தரசி, 5 சவரன் செயின் இரண்டரை சவரன் உள்ள நான்கு மோதிரங்கள் மற்றும், ஒன்றரை சவரன் தாலிமங்கல்யம் என மொத்தம், 9 சவரன் தங்க நகை கொடுத்தார். அவர்கள் இருவரும் வீட்டிலேயே பாலிஷ் போடுவதாக பாவனை செய்து, குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வாருங்கள் என கூறியதும், முத்தரசி சமையல் அறைக்கு சென்ற போது, மின்னல் வேகத்தில், 9 சவரன் நகையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து முத்தரசி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை