| ADDED : ஜூன் 01, 2024 06:21 AM
பெரியபாளையம்: பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தினமும், பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டலம், தும்பாக்கம், ராள்ளபாடி, வடமதுரை, மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் மருத்துவத் தேவைக்கு இங்கு சென்று வருகின்றனர். இங்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு குண்டும், குழியுமாக காணப்பட்ட சுகாதார நிலைய வளாகம், அவசர கதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி சமன் செய்யப்பட்டது.பின் தார் சாலை அமைக்கப்படும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்தனர். தற்போது ஜல்லிக்கற்களுடன் அப்பகுதி காணப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்த ஜல்லிக்கற்களில் நடந்து செல்கின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை சுற்றி, தார் சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.