வயல்வெளியில் உருக்குலைந்த மின்கம்பம்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை கால்நடை மருந்தகம் அருகே தனிநபருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் வழியாக மின்கம்பங்கள் அமைத்து விவசாய கிணறுகள் மற்றும் கே.ஜி.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் வயல்வெளியில் உள்ள ஒரு மின்கம்பம் முழுதும் சேதடைந்துள்ளது. மின்கம்பத்தின் சிமென்ட் தளம் முழுமையாக பெயர்ந்து இரும்புகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் தனிநபர் பழுதடைந்த மின்கம்பம் இருக்கும் நிலத்தில் பயிரிடுவதற்கு அச்சப்படுகிறார்.சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி தருமாறு பாதிக்கப்பட்ட விவசாயி கே.ஜி.கண்டிகை மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே திருத்தணி கோட்ட மின்வாரிய அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.