உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாட்டி எடுக்கும் வெயில் வெறிச்சோடிய மேம்பாலம்

வாட்டி எடுக்கும் வெயில் வெறிச்சோடிய மேம்பாலம்

ஊத்துக்கோட்டை:கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியள்ள பகுதிகளில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வெயிலின் உக்கிரத்தால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.மதியம், 12:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை உஷ்ணக் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர அச்சமடைந்து உள்ளனர். வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை - - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. வெயிலின் தாக்கத்தால் குறைந்தளவு வாகனங்களே இயங்குகின்றன. அங்குள்ள ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் வெயிலின் தாக்கத்தால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை