உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்

தனியார் கிடங்கில் தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்

திருவள்ளூர்: சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ், 34. இவர் வெள்ளவேடு அடுத்த கோலப்பன்சேரியில் பிளாஸ்டிக் பொருட்கள், பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் வைக்கும் கிடங்கு வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் இந்த கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் அளித்த தகவலின் பேரில் அம்பத்துார் எஸ்டேட், பூந்தமல்லி, ஆவடி, கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதில் நள்ளிரவு 1:00 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ