உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொண்டர்களை சந்திக்காமல் புறக்கணிப்பு ஜெகத்ரட்சகன் மீது சரமாரி புகார்

தொண்டர்களை சந்திக்காமல் புறக்கணிப்பு ஜெகத்ரட்சகன் மீது சரமாரி புகார்

திருவள்ளூர்:'அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர், கட்சி நிர்வாகிகளை, 2 நிமிடம் கூட ஒதுக்கி சந்திக்காமல் சென்றது தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது' என, ஒன்றிய நிர்வாகி ஒருவர், 'இண்டியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் புகார் தெரிவித்ததால், மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருத்தணியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அரக்கோணம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'இண்டியா' கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் காங்., வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வைட்டமின் 'ப' தாராளம்

ஒன்றியம், நகரம் வாரியாக, நிர்வாகிகள் கருத்து கூற அழைப்பு விடுக்கப்பட்டது. திருத்தணி ஒன்றிய நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'அரக்கோணம் தொகுதி வேட்பாளராக அறிவித்தவுடன் திருத்தணியில் நடந்த அறிமுக கூட்டத்திற்கு ஜெகத்ரட்சகன் வந்தார். வாழ்த்து கூற வந்தோரை சந்திக்காமல், 2 நிமிடத்திற்குள் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். இதனால், தொண்டர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்' என்றார்.உடனே மாவட்ட செயலர் சந்திரன் 'இது கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம்; நமது கட்சி செயற்குழுவில் பேசுவது போல் இங்கு கூறாதீர்கள்' என பேசினார். அதன் பின், அந்த நிர்வாகி, இம்முறை வேட்பாளருக்கு, கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெற பாடுபடுவோம் என, வழக்கமான 'துதி' பாடி பேசினார்.

ரட்சகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை. மேலும் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்ததால், கட்சி நிர்வாகிகள், மக்கள் இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்,.இதனால், கட்சி நிர்வாகிகளே அதிருப்தியில் இருப்பதுடன், தேர்தலில் உள்ளடி வேலை செய்வதற்கு தயாராக இருந்தனர். தகவல் அறிந்ததும், ஜெகத்ரட்சகன், அதிருப்தியில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குறித்து கணக்கெடுத்து, அவர்களை திருப்தி படுத்துவதற்காக, ஒவ்வொருவருக்கும், 5 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து சரிகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஓரிரு நாளில், ஒன்றிய செயலர், நகர செயலர்களுக்கு முதல் தவணையாக, தலா, 25 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி