உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திர மாநில எல்லையில் செயல்படாத சோதனை சாவடி

ஆந்திர மாநில எல்லையில் செயல்படாத சோதனை சாவடி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் சாலையில், புதுார் மேடு வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சாலை வசதி உள்ளது. இந்த கூட்டு சாலையில், போலீஸ் சோதனை சாவடி அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்த சோதனை சாவடி செயல்பட்டு வந்தது.புதுார் மேடு கூட்டு சாலையில், சோதனை சாவடி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சோதனை சாவடி பூட்டியே கிடக்கிறது. புதுார் மேடு கிராமத்தில், ஏற்னவே, ஏ.டி.எம். கொள்ளை முயற்சி, வேளாண் கூட்டுறவு தொடக்க வங்கியில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குற்ற சம்பவங்களை தடுக்க, புதுார் மேடு சோதனை சாவடியை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை