போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை
திருவாலங்காடு,:திருவள்ளூர் -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக பேருந்து நிறுத்தத்தில், 5 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.பயணியர் மழை வெயிலில் இருந்து பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது.மேலும் நிழற்குடை அசுத்தமாக காட்சியளிப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் பயணியர் நிழற்குடையை போஸ்டர் ஒட்டி அசுத்தம் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.