திருட முயன்ற வாலிபர் கைது
திருவள்ளூர் : மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பாக்சிட் தொழிற்சாலை அருகே சந்தேகப்படும்படி மூன்று மர்ம நபர்கள் கையில் இரும்பு ராடுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் இருவர் தப்பியோடினர். ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கீவளூர் பகுதியைச் சேர்ந்த ஜீவன், 23 என தெரிந்தது.இவர் தன் நண்பர்களான வெங்கத்துார் அன்பரசன், மற்றும் கீவளூர் சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து தனியார் தொழிற்சாலையில் திருட வந்ததும் தெரிந்தது. வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் ஜீவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.