உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தத்தளிக்கும் விளையாட்டு மைதானம்

தத்தளிக்கும் விளையாட்டு மைதானம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை 10:00 மணி வரை பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் நகரில், பெய்த தொடர் மழை காரணமாக, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால், நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோர் நேற்று காலை உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சாலையும் தண்ணீர் வெளியேற முடியாமல், குளம் போல் தேங்கி உள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக திருவள்ளூர், ஆவடி, ஜமீன் கொரட்டூரில் 2.5 செ.மீ., மழை பதிவாகியது. ஊத்துக் கோட்டை-2.4, சோழவரம்-2.26, 1.9, செங்குன்றம்-1.8, தாமரைப்பாக்கம்-1.1, பொன்னேரியில் 1.0 செ.மீட்டர் மழை பதிவாகியது.

குளமான சாலை

கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று அதிகாலையில் கனமழை பெய்தது. இடைவிடாது, இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மழைநீர் வடிகால் வசதியில்லாத பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தச்சூர் கூட்டு சாலையில், மேம்பாலத்தின் கீழ் சென்னை நோக்கி செல்லும் இணைப்பு சாலையில், வடிகால் வசதி இல்லாததால், மூன்று அடி ஆழத்திற்கு குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் டூ- -வீலர்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் எதிர் திசை இணைப்பு சாலையில் சென்றன. கனரக வாகனங்கள் மட்டும் அந்த இணைப்பு சாலையை சிரமத்துடன் கடந்து சென்றன.கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை, ஓபுளாபுரம், துராபள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஒட்டியுள்ள இணைப்பு சாலைகளில், மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை