உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜி.சி.எஸ்., கண்டிகை 4 முனை சந்திப்பில் விபத்து அபாயம்

ஜி.சி.எஸ்., கண்டிகை 4 முனை சந்திப்பில் விபத்து அபாயம்

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டையில் இருந்து ஜி.சி.எஸ்.கண்டிகை வழியாக, மத்துாருக்கு சாலை வசதி உள்ளது. இந்த மார்க்கமாக, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து நெசவாளர்கள் இருசக்கர வாகனங்களில் மத்துாருக்கு பாவு மற்றும் நெசவு ஊடை நுால் கட்டுகளெ கொண்டு செல்கின்றனர். இந்த மார்க்கத்தில் ஜி.சி.எஸ்.கண்டிகை அருகே, கே.ஜி.கண்டிகயைில் இருந்து பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை செல்லும் சாலை குறுக்கிடுகிறது. இந்த நான்கு முனை சந்திப்பில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இங்கு சாலையில் பேரிகார்டு வைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மார்க்கத்தில் தனியார் பள்ளி வாகனங்களும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இரவு நேரத்தில் தனியார் தொழிற்சாலை வாகனங்களில் வந்து இறங்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, உயர்கோபுர மின்விளக்கும் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ