உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெங்கல்ராஜகுப்பத்தில் விபத்து அபாயம் தடுப்பு சுவர் இல்லாத குளக்கரை சாலை

வெங்கல்ராஜகுப்பத்தில் விபத்து அபாயம் தடுப்பு சுவர் இல்லாத குளக்கரை சாலை

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கல்ராஜகுப்பம் கிராமம். இந்த கிராமத்தின் கிழக்கில் பொது குளம் உள்ளது. இந்த குளம் நீண்டகாலமாக துார் வாரி சீரமைக்காததால், சீரழிந்துள்ளது. குளத்தில் கருவேல மரம் உள்ளிட்டவை வளர்ந்துள்ளன. நீர்வரத்து கால்வாய்களும் துார்ந்து கிடக்கின்றன. குளத்திற்கு அருகில் உள்ள ஏரி மற்றும் நொச்சிலி காப்புக்காட்டில் இருந்து நீர்வரத்து உள்ளது. குளத்தின் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தால், கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் இந்த குளக்கரையின் மீதான சாலை வழியாக கிராமத்தினர், பொதட்டூர்பேட்டை மற்றும் நொச்சிலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த குளக்கரை சாலைக்கும், குளத்திற்கும் தடுப்பு ஏதுவும் இல்லை. இதனால், இந்த வழியாக செல்லும் பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். குளத்தை துார் சீரமைக்கவும், குளக்கரையில் தடுப்பு சுவர் ஏற்படுத்தவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி