உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை

திருவள்ளூர்:'பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வருவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அவர்களின் இடை நிற்றலை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மை கூட்டமைப்பு வாயிலாக, ஊராட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்ற மாணவ, மாணவியரை கண்டறிந்து வரும், 9ம் தேதிக்குள் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.மேலும், 15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநிற்கும் வாய்ப்புள்ள குழந்தைகளையும், மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை