| ADDED : ஜூலை 26, 2024 02:49 AM
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சேதமான பகுதிகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி அருகே சின்னஓபுளாபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், மழையால் சேதமான சாலையை புதுப்பிக்கும் பணிக்காக, இரு வாரங்களுக்கு முன் பழைய சாலை பெயர்க்கப்பட்டது.அப்போது, சாலையில் இருந்து வெளியேறிய சிறிய ஜல்லி கற்களை முறையாக அப்புறப்படுத்தவில்லை. அந்த ஜல்லி கற்கள் மேம்பாலம் முழுதும் பரவி கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பரவி கிடக்கும் ஜல்லி கற்கள் அனைத்து வாகனங்களின் டயர்களை பதம்பார்ப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, உடனடியாக சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.