உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு

சேதமடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட முகமது அலி தெருவில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.இம்மையம் கட்டி, 30 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது. இதனால், கட்டடத்தின் உறுதி தன்மை வலுவிழந்து உள்ளது.இந்த மையத்தை புதுப்பிக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசு கூறுகையில், 'முகமது அலி தெருவில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம் பழுதடைந்து விட்டது.'மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு புதிய கட்டடம், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்ட, நகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், ஒப்பந்தம் விடப்பட்டு, புதிய கட்டடம், நவீன சமையலறையுடன் கட்டப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை