உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெண்டைக்காய் விதை ஆய்வு வேளாண் துறை ஆலோசனை

வெண்டைக்காய் விதை ஆய்வு வேளாண் துறை ஆலோசனை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை ஆய்வக வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வெண்டைக்காய் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காய்கறி பயிர். இதில் வைட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது. வெண்டைக்காய் எவ்வித மண் வகையிலும் பயிரிடலாம். ஜூன் - ஆக., மற்றும் பிப்., - மார்ச் ஆகிய பருவங்களில் நன்கு வளரும். இரண்டரை ஏக்கருக்கு 7.5 கிலோ விதை தேவை.வெண்டைக்காயில் காய் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி, 12 வைக்க வேண்டும். கார்பரில் நனையும் துாள், 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். மஞ்சள் நரம்பு தோல் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈக்களை, வேம்பு எண்ணெய், 1 லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தலாம். பயிரிட்டு, 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். இரண்டரை ஏக்கருக்கு, 12,000 - 15,000 கிலோ காய்கள் கிடைக்கும்.வெண்டை காய்கறி விதை விதைப்பதற்கு முன், அதை பரிசோதனை செய்து, ஈரப்பதம் 10 சதவீதம், புறத்துாய்மை 99 சதவீதம் மற்றும் குறைந்தபட்ச முளைப்புத்திறன், 65 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை