உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பந்தை விழுங்கிய 8 மாத குழந்தை பலி

பந்தை விழுங்கிய 8 மாத குழந்தை பலி

பழவேற்காடு:பழவேற்காடு, அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 25; மீனவர். இவரது, எட்டு மாத ஆண் குழந்தை சர்வேஷ். நேற்று காலை, சர்வேஷை வீட்டில் உள்ள முகப்பு அறையில் படுக்க வைத்து, அருகில் விளையாட்டு பொருட்களை போட்டு விட்டு, பெற்றோர் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென குழந்தை மயங்கி நிலையில் இருப்பதை கண்டனர். குழந்தை விளையாட்டு பொருட்களில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பந்து ஒன்றை விழுங்கி, தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறலில் மயங்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். எட்டு மாத குழந்தை பிளாஸ்டிக் பந்தை விழுங்கி, இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை