மேலும் செய்திகள்
களத்துாரில் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
26-Aug-2024
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை ஊராட்சியில், எஸ்.அக்ரஹாரம் செல்லும் சாலையில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் கே.ஜி.கண்டிகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், நோயாளிகளுக்கு வீடுகள் தேடி மருந்து, மாத்திரைகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டது.கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடம் சேதம் அடைந்துள்ளன. மேலும், தளம் போட்ட கட்டடம் இல்லாமல் இரும்பு சீட் அமைக்கப்பட்டுள்ளதால், செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிப்பதற்கு கடும் சிரமப் படுகின்றனர்.மேலும் மழை பெய்யும் போது, கட்டடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் செவிலியர்கள் வேலை செய்ய மற்றும் மாத்திரைகள் நனையும் அபாயம் உள்ளதால் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
26-Aug-2024