உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஹெல்த் கேர் டூரிசம் பெயரில் ரூ.2 கோடி ஏமாற்றியவர் கைது

ஹெல்த் கேர் டூரிசம் பெயரில் ரூ.2 கோடி ஏமாற்றியவர் கைது

ஆவடி: அம்பத்துார், வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 47. இவர் அதே பகுதியில் கடந்த 66 ஆண்டுகளாக, அசோக் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும், அண்ணா நகரில் களீஷ்வா என்ற பெயரில் உள் அலங்காரநிறுவனம் நடத்தி வரும் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2016ல், வெளிநாட்டு நோயாளிகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தால், நிறைய லாபம் பார்க்கலாம் என அசோக்குமாருக்கு ஆசை காட்டி, 'குளோபல் ஹெல்த் கேர் டூரிசம்' என்ற நிறுவனத்தை சண்முகம் துவக்கி உள்ளார்.இதில் கிடைக்கும் வருமானத்தில் பங்கு தருவதாகக் கூறி, பல்வேறு தவணையாக 2016 முதல்- 2021ம் ஆண்டு வரை, 2.05 கோடி ரூபாயை, அசோக்குமாரிடம் இருந்து பெற்றுள்ளார்.ஆனால், கூறியபடி பங்கு தொகையை தராமல் சண்முகம் ஏமாற்றியுள்ளார். அசோக்குமார் பணத்தை கேட்ட போது, தான் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றுவதாகவும், நகை கடையில் வருமான வரி சோதனை நடத்தி, கடையை காலி செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இதுகுறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், அசோக்குமார் கடந்த 18ம் தேதி புகார் அளித்தார். இதன்படி, செங்குன்றத்தில் பதுங்கியிருந்த சண்முகம்,49, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ