மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
5 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
5 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
6 hour(s) ago
கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டமேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் சென்று வந்தனர். இந்த நிழற்குடை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அதன்பின், பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பயணியர் மற்றும் மாணவ -- மாணவியர் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago