உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவின் நெய், பனீர்  கையிருப்பு இல்லை!

ஆவின் நெய், பனீர்  கையிருப்பு இல்லை!

சென்னை: ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுதும் பாலகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.பால் பற்றாக்குறை காரணமாக, ஆவினில் கிட்டத்தட்ட, 10 மாதங்களுக்கு மேலாக வெண்ணெய் உற்பத்தி இல்லை. இதனால், சில தனியார் பாலகங்களில், குஜராத் அமுல் நிறுவனத்தின் வெண்ணெய் வாயிலாக, நுகர்வோரின் தேவை பூர்த்தியாகிறது.நேற்று, ஆவின் பாலகங்களில் நெய் மற்றும் பனீரும் கிடைக்கவில்லை. பல மாவட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், அம்பத்துார் பால் பொருட்கள் கிடங்கில், அவை கையிருப்பில் இல்லை.இதனால், முன்பதிவு செய்த பாலகங்களுக்கு, அவை வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், ஞாயிற்றுகிழமை பாலகங்களுக்கு சென்றவர்கள், நெய், பனீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். பால் பொருட்கள் உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்து இருப்பதாக, பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால், பலவகை பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்