சிறுதானிய உணவுகளின் மகத்துவம் பாவை கூத்து வாயிலாக விழிப்புணர்வு
திருவள்ளூர்:திருவள்ளூர் புத்தக கண்காட்சியில், சிறுதானிய உணவு வகைகளின் மகத்துவம் குறித்து, தோல் பாவை கூத்து வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, பொருட்காட்சி அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான்காவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் நேற்று, உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுகள், செறிவூட்டப்பட்ட உணவுகளின் மகத்துவம் குறித்து தோல்பாவை கூத்து வாயிலாக விழிப்புணர்வு நாடகம் நடந்தது.இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவு, செறிவூட்டப்பட்ட உணவுகளின் மகத்துவம் குறித்து பாரம்பரியமிக்க கலையான தோல்பாவை கூத்து நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதை, கன்னியாகுமரி மாவட்ட நாடக கலைஞர்கள், பள்ளி மாணவர்களை கவரும் வகையில் சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவு குறித்து விளக்கப்பட்டது. இதன் வாயிலாக, பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு வகைகளை உண்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் சங்கிலிரதி, திருவள்ளுர் தாசில்தார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.