உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் நிலையத்தில் கால்நடை ஜாலி உலா

பஸ் நிலையத்தில் கால்நடை ஜாலி உலா

திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில், அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும், 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.இதுதவிர, அரக்கோணம் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.மேலும், முருகன் கோவிலுக்கு வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தின் வழியாகவே செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பேருந்து நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பேருந்து நிலையத்தில் வீசப்படும் பழவகைகள் மற்றும் உணவு வகைகளை மாடுகள் சாப்பிட்டு, அங்கேயே படுத்து ஓய்வெடுக்கிறது. அதேபோல், அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் மாடுகள் சுற்றித் திரிவதுடன், சாலையோரம் படுத்து ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே விபத்துக்களை தடுக்க, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், திருத்தணி நகராட்சியில் மாடுகள் ஜாலியாக உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Muthu Kumaran
ஜூன் 27, 2024 09:15

யாரையாவது மாடு குத்தி - மருத்துவமனை அல்லது இறந்துவிட்டால் நடவடிக்கை எடுப்பார்கள். வெயிட் பண்ணவும்,


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை