மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
5 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
6 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
6 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
6 hour(s) ago
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில். கோவிலின் உற்சவரான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரின் நடுவே அமைந்துள்ள கோவிலில் அருள்பாலித்து வருகிறார். பக்தோசித பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை முதல் நாளான ஏப்., 14ம் தேதி, உற்சவர் பக்தோசித பெருமாள் பெரிய மலை யோக நரசிம்மர் சுவாமி கோவிலுக்கு எழுந்தருள்கிறார்.ஊர் கோவிலில் அம்ச வாகனம், சிம்ம வாகனம், கஜ வாகனம் என தினசரி பல்வேறு வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருள்கிறார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக தேர் செப்பனிடும் பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. தேர் பராமரிப்பு பணிகளுடன், கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago