உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு கடல் அலையில் ஒதுங்கும் ஓடுகள் சேகரிப்பு

பழவேற்காடு கடல் அலையில் ஒதுங்கும் ஓடுகள் சேகரிப்பு

பழவேற்காடு : பழவேற்காடு கடல் பகுதியில், கடந்த சில தினங்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது.கடலில் உயிரிழக்கும் கிளிஞ்சல்களின் ஓடுகள் ஆர்ப்பரித்து வரும் கடல் அலையில் கடற்கரையில் ஒதுங்குகின்றன.அவற்றை மீனவப் பெண்கள் சிறு வலைகளின் உதவியுடன் சேகரித்து வருகின்றனர். அவற்றின் ஓடுகள் உடையாமல் இருப்பவை, கலைப் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.மற்றவை சுண்ணாம்பு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சேகரிக்கப்படும் கிளிஞ்சல் ஓடுகளை மீனவப்பெண்கள் விற்பனைக்கு ஏற்ப, தனித்தனியாக பிரித்து கடற்கரை பகுதியில் ஆங்காங்கே குவித்து வைக்கின்றனர்.வியாபாரிகள் அவற்றை வாங்கி, சுண்ணாம்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், கலைப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.அதிகாலை நேரத்தில் கடற்கரை பகுதியில், பெண்கள் கிளிஞ்சல் ஓடுகள் சேகரிப்பில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். அன்றாட வாழ்வாதாரத்திற்காக, கிளிஞ்சல் சேகரிப்பில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை