உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் மருந்தகத்தினால் தொழில் முனைவராக பயன் பெற்றவருக்கு கலெக்டர் பாராட்டு

முதல்வர் மருந்தகத்தினால் தொழில் முனைவராக பயன் பெற்றவருக்கு கலெக்டர் பாராட்டு

திருத்தணி,:திருத்தணி நகராட்சி, பெரியார் நகர் பகுதியில், இரு நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார்.'முதல்வர் மருந்தகம்' அமைப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கு மருந்தகம் அமைத்து உள்கட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும், தங்களை தொழில் முனைவோர்களாக மாற்றிக் கொள்ள ஏதுவாகவும் கடன் தொகையில் மானியமாக அரசு வழங்குகிறது.இந்நிலையில், நேற்று, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர் திருத்தணி பெரியார் நகரில் துவங்கப்பட்ட முதல்வர் மருந்தகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின், முதல்வர் மருந்தகத்தின் வாயிலாக தொழில் முனைவோராக பயன்பெற்ற யோகேஷ் என்பவரை கலெக்டர் பிரதாப் பாராட்டி, புத்தகம் பரிசு வழங்கினார்.பின் கலெக்டர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு 15 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு 19 முதல்வர் மருந்தகங்களும் துவங்கப்பட்டுள்ளன. இதில், 15 தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகங்களுக்கு தலா, ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய் வீதம் மானியமாகவும், 19 கூட்டுறவுச் சங்க முதல்வர் மருந்தகங்களுக்கு தலா, ஒரு கோடி ரூபாய் வீதம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 34 முதல்வர் மருந்தகங்களுக்கு, 41.50 கோடி ரூபாய் மானியாக வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களில் துணை பதிவாளர் அமுதா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி தாசில்தார் மலர்விழி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை