உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சேர்மன் தங்கதனம் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஏ.ரவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, 27 ஊராட்சிகளில் பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் இடித்து அகற்றுதல் பிளேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய்கள் புதியதாக அமைத்தல், குடிநீர் வசதிக்காக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பைப் லைன் அமைத்தல், புதிய மின்மோட்டார்கள் கொள்முதல் செய்வது, பழுதடைந்த மின்மோட்டார்கள் பழுது பார்ப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு, 1.16 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை