உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பங்கள் மாற்றுவதில் தாமதம் சாலை விரிவாக்க பணிகள் பாதிப்பு

மின்கம்பங்கள் மாற்றுவதில் தாமதம் சாலை விரிவாக்க பணிகள் பாதிப்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் சாலை சந்திப்பில் துவங்கி, வல்லுார் வரையிலான, 2 கி.மீ., மாநில நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது.வியாபாரிகள், குடியிருப்பு வாசிகளின் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, தற்போது 16 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மாற்று இடத்தில் பொருத்தப்படாமல் உள்ளன. இதனால் புங்கம்பேடு, பட்டமந்திரி, ரமணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால், தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து ரமணா நகர் வியாபாரிகள் கூறியதாவது:சாலை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் மின்கம்பம், குழாய், மரம் உள்ளிட்டவை அகற்றப்படாததால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்கின்றனர். நெடுஞ்சாலை, மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுகின்றன. போராட்டங்களை மேற்கொள்ளும்போது கொடுக்கும் உறுதிமொழி எதையும் பின்பற்றுவதில்லை.மின்கம்பம், குடிநீர் குழாய் என, சாலை பணிகளுக்கு இடையூறாக இருப்பதை மாற்று இடத்தில் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை