உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.இந்நிலையில், தொடர் விடுமுறையால் நேற்று முன்தினம் முதல் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.நேற்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் தேர்வீதியில் குவிந்தனர். கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று ஆவணி மாத கிருத்திகை விழா என்பதால், காவடிகளுடன் அதிகளவில் பக்தர்கள் வருவர் என்பதால், சில பக்தர்கள் நேற்றே காவடிகள் எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை