உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அசுத்தமான கேன்களில் குடிநீர் வினியோகம்

அசுத்தமான கேன்களில் குடிநீர் வினியோகம்

ஊத்துக்கோட்டை,: தமிழக -ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.பின்னர் குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் குடிநீர்தாகத்தை தீர்க்க கேன்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பணம் கொடுத்து வாங்குகின்றனர். ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இயங்கும் குடிநீர் விற்பனை நிலையத்தில் இருந்து சிலர் கேன்களில் எடுத்து வந்து ஊத்துக்கோட்டையில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.இவ்வாறு பணம் கொடுத்து வாங்கும் கேன்கள் பழுதடைந்து, அழுக்காக உள்ளது. இதில் குடிநீரை நிரப்பி விற்பனை செய்கின்றனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கேன்களில் விற்கப்படும் குடிநீரை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ