மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா
1 hour(s) ago
தண்ணீர் நிரம்பாத குளம் சீரமைக்க வேண்டுகோள்
1 hour(s) ago
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
1 hour(s) ago
இரண்டே மாதத்தில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அதிருப்தி
1 hour(s) ago
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்து உள்ளது. நகைக்கடன், சேமிப்பு, மகளிர் குழுவிற்கான கடன், விவசாய கடன், தொழில்கடன் என பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.இங்கு, 5,000க்கும் அதிகமான வாடிக்கைகயாளர்கள் உள்ளனர். மெதுார் பகுதியை சுற்றியுள்ள, 28 கிராமங்களுக்கு, முக்கிய வங்கியாக உள்ளது. இந்த வங்கி அலுவலகமானது, மெதுார் பஜார் பகுதியில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்தில் வரும் விவசாயிகள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் மெதுார் பஜார் பகுதியில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொண்டு, மீண்டும், 1.5 கி.மீ., நடந்து சென்று மெதுார் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வங்கியில் இருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்து செல்லும்போது, வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.இதனால் பெண்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் இந்த வங்கி அமைந்துள்ளதால், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி உள்ளது.இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சிரமங்களை சந்திக்கின்றனர்.மேற்கண்ட வங்கி பகுதியின் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்வதற்கு ஏதுவாக நிறுத்தம் அமைக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago