உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி தேவி, 60; நேற்று முன்தினம், தன் மாடுகளை அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.ஒரு மாடு வழி தவறி சென்றதை கண்டவர் பிடிக்க முயன்ற போது கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் தேவியை மீட்டு, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து தேவியின் மகன் குமார் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ