உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்பொதட்டூர், வாணிவிலாசபுரம், சவுட்டூர் உள்ளிட்ட பகுதியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மேலும், பொதட்டூர்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கீழப்பூடி, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, காக்களுர் உள்ளிட்ட கிராமத்தினரும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். தினசரி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர திருத்தணி கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும் ஏராளமானோர் உள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தனியார் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பயணியர் காத்திருக்க போதிய இடவசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.பொது போக்குவரத்துக்கான வாகனங்களை தவிர்த்து இதர வாகனங்களை ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ