மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா
1 hour(s) ago
தண்ணீர் நிரம்பாத குளம் சீரமைக்க வேண்டுகோள்
1 hour(s) ago
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
1 hour(s) ago
இரண்டே மாதத்தில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அதிருப்தி
1 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சி கூவம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கொண்டஞ்சேரி வழியாக சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதில் கொண்டஞ்சேரி பகுதியில் கூவம் ஏரிநீர் வரும் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீர் அதிகமாக வரும்போது போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென 30க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதையடுத்து தமிழக அரசு இப்பகுதியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்ட உத்தரவிட்டதையடுத்து மேம்பாலப் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது.30 மீட்டர் நீளம் 13 மீ்ட்டர் அகலத்தில் இரண்டு துாண்களுடன் கட்டப்படவுள்ள இந்த புதிய மேம்பாலப் பணிகளை இரு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago