உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சத்துணவு ஊழியர்கள் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்

திருத்தணி:திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் லதா தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு மையங்களில் உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டு பணிமுடித்த சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆசிரியர் பயிற்சி முடித்த சத்துணவு ஊழியர்களை ஆசிரியராக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ