உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடையில் குப்பை எரிப்பு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

ஓடையில் குப்பை எரிப்பு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் மேற்கில் உள்ள பாலாபுரம் பகுதியில் உருவாகும் ஓடைகள், அம்மையார்குப்பம், விளக்கணாம்பூடி, நாராயணபுரம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளை கடந்து, மடுகூர் ஓடை வழியாக ஆதிவராகபுரம் அருகே பாய்ந்து செல்கிறது.இந்த ஓடை ஆதிவராகபுரத்தை கடந்து, ஞானகொல்லிதோப்பு ஓடையில் கலக்கிறது. இந்நிலையில், ஆதிவராகபுரம் கிராமத்தின் வடக்கில் ஓடையின் கரையில் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. மேலும், எரிந்து கருகிய குப்பையும், எரியாமல் காற்றில் பறக்கும் குப்பையும் ஓடையில் கலந்து வருகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீர்நிலையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளநீரில் குப்பை கலந்து மாசடைவதால், நீர்வாழ் உயிரினங்களும், பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. குப்பையை முறையாக கையாள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உரிய இடத்தில் குப்பையை தரம் பிரித்து பயன்படுத்த, ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை