உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமையில், 75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை சட்ட விதிகளின்படி உடனே வேலை வழங்க வேண்டும், மாதம், 35 கிலோ ரேஷன் அரிசி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சம்பத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் தமிழரசு உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ