மேலும் செய்திகள்
விஷ வண்டு கடித்து முதியவர் உயிரிழப்பு
19-Aug-2024
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் இருந்து, ஆந்திர மாநிலம் சித்தூருக்கு, 178 வைக்கோல் கட்டுக்களுடன், 'ஈச்சர்' லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலநேரியைச் சேர்ந்த ஆரீப், 22, என்பவர் ஓட்டி வந்தார். அபினார், 22, என்பவரும் உடனிருந்தார்.திருப்பாச்சூர் பெரிய காலனி அருகே வந்த போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி வைக்கோல் கட்டு மீது உரசியதில் தீப்பிடித்தது. அவ்வழியான வாகனங்களில் சென்றவர்கள் கூச்சலிடவே, ஓட்டுனர் மற்றும் கிளீனர் லாரியை நிறுத்தி விட்டு உயிர் தப்பினர். தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் மற்றும் திருவள்ளூர், பேரம்பாக்கம் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுதும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Aug-2024