உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அஞ்சல் துறையில் காப்பீடு செய்வோர் அதிகரிப்பு 5,023 பாலிசி வாயிலாக 56 கோடி ரூபாய் வருவாய்

அஞ்சல் துறையில் காப்பீடு செய்வோர் அதிகரிப்பு 5,023 பாலிசி வாயிலாக 56 கோடி ரூபாய் வருவாய்

காஞ்சிபுரம் : கடந்த நிதி ஆண்டை காட்டிலும், நடப்பு நிதி ஆண்டில், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 904 பாலிசிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. இதன் மூலமாக, 17.79 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின்கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் இரண்டு தலைமை தபால் நிலையங்கள், 55 துணை அஞ்சல் நிலையங்கள், 272 கிளை தபால் நிலையங்கள் என, 392 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு நிதி, கால வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம். அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வரிசையில், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், புதிய பாலிசிகள் சேர்க்கப்படுகிறன.அதன்படி, 2022 - -23 நிதி ஆண்டு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 4,119 பாலிசிகள் பெறப்பட்டு உள்ளன. இதன் மூலமாக, 38.37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.அதேபோல, நடப்பு நிதி ஆண்டு, 2023- - 24ம் நிதி ஆண்டில், 5,023 பாலிசிகள் பெறப்பட்டு உள்ளன. இதன் மூலமாக, 56.16 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளன.இது, கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, 904 பாலிசிகளின் எண்ணிக்கை கூடுதலாகும். இதன் மூலமாக, கடந்த ஆண்டு வருவாய் காட்டிலும், நடப்பாண்டு வருவாய், 17.79 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாகும். காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், பல வித அஞ்சல் கணக்குகள் துவக்குவதில், முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் பாலிசிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. இது, சிறப்பு முகாம்கள் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்களின் ஒத்துழைப்பால், புதிய பாலிசிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

காப்பீடு திட்டங்கள்

திட்டங்கள் 2022--23 2023--24கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு 2,648 3,137அஞ்சல் ஆயுள் காப்பீடு 1,471 1,886மொத்தம் 4,119 5,023


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ